இந்தியா

கதர் வாரிய ஊழியர்கள்இரு பிரிவாக போராட்டம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

புதுச்சேரி; நிலுவை சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கதர் வாரிய ஊழியர்கள் இரண்டு பிரிவாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கதர் கிராமத் தொழில் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 12 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும், 7வது ஊதியக் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வு, கல்விக் கட்டணம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சாரத்தில் உள்ள கதர் வாரிய தலைமை அலுவலகம் எதிரில் கதர் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 14ம் தேதி காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இன்னொரு பிரிவு ஊழியர்கள் தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மைய வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். போராட்டத்தை, அரசு ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் சேஷாச்சலம் துவக்கி வைத்தார். ஊழியர் நலச் சங்கத்தின் தலைவர் பழனிவேலு, ஊழியர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் கோதண்டராமன், பணியாளர் நலச் சங்கத்தின் தலைவர் செல்வலிங்கம், தொழில்நுட்ப பணியாளர் சங்கத்தின் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X