மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை | Dinamalar

இந்தியா

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

Added : செப் 17, 2020
Share

திருக்கனுார்; குடிப்பதை மனைவி கண்டித்ததால், மனமுடைந்த கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் நாவப்பன், 55; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார்.இதனை மனைவி ஜோதி கண்டித்தார். மனமுடைந்த நாவப்பன், நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த திருக்கனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அவரது மகன் வீரமணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X