பாக்.,குக்கு தகுதி இல்லை: இந்தியா கடும் தாக்கு

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
pak, not worthy, united nations, india, terrorists, center, பாக்., தகுதி, இல்லை, ஐக்கிய நாடுகள் சபை கூட்டம், இந்தியா, தாக்கு

ஜெனிவா: 'பயங்கரவாதத்தின் மையமாக உள்ள பாகிஸ்தானுக்கு, மனித உரிமைகள் பற்றி பேச, எந்த தகுதியும் இல்லை' என, இந்தியா உறுதிபட தெரிவித்து உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கவுன்சிலின், 45வது கூட்டம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்தது. இதில், பேசிய பாகிஸ்தான. 'ஜம்மு - காஷ்மீரில், மனித உரிமைகள் மீறப்படுகின்றன' என, வழக்கம் போல் ஒப்பாரி வைத்தது. இதற்கு பதில் அளித்து, இந்திய பிரதிநிதி கூறியதாவது:சர்வதேச அளவில், பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது. இதை மறைக்க, பயங்கரவாதத்தால் தாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக, பாகிஸ்தான் முதலைக்கண்ணீர் வடிக்கிறது.


latest tamil newsஇந்நாட்டில், சிறுபான்மையினர்களான ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் பெரும் சித்ரவதைக்கு உள்ளாகி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு உள்ளன.அவர்கள் கடத்தப் பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இப்படிப்பட்ட நாட்டுக்கு, மனித உரிமை பற்றி பேச, எந்த தகுதியும் இல்லை. சர்வதேச பயங்கரவாதிகளாக, ஐ.நா.,வால் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, பாகிஸ்தானில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக, ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதை, அந்நாட்டு பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார்.ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்த விவகாரத்தில் தலையிடவோ, கருத்து கூறவோ, ஓ.ஐ.சி., எனப்படும், இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்புக்கு, எந்த உரிமையும் இல்லை. இவ்வாறு, இந்திய பிரதிநிதி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202015:59:34 IST Report Abuse
Ram this is the opportunity, India would have d Chinaa as Rogue country and ask the superpowers to pull out its veto power. Then Chinaas Tail would be in dock yard.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
17-செப்-202014:44:28 IST Report Abuse
Rasheel ட்டுமிராண்டிகளால் வாளால் வன்முறையால் பெண் கடத்தலால் இறந்து போனவர்கள் ஏராளம் ஏராளம். அதில் இறந்து போன மக்கள் காஷ்மீரில் இருந்து கன்யாகுமரிவரை ஒவ்வரு குடும்பத்திலும் நடந்து உள்ளது. இதை எல்லாம் மறந்து காலத்தின் போக்கில் செகுலரிஸ்ம் பேசி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.
Rate this:
Cancel
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) தப்ளிக்களுக்கு இந்தியாவில் இருக்கும் சுதந்திரம் உலகில் வேறெங்கும் இல்லை... ஆனாலும் பாக்கிகள் அடங்குவதில்லை... நாசகார வேலைகளைப்பற்றியே சிந்திக்கிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X