மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவு: ஆய்வில் தகவல்

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
american president, election, indians, support, joe biden, trump, 2 third, அமெரிக்க அதிபர் தேர்தல், மூன்றில் இரண்டு பங்கு, இந்தியர்கள், பிடனுக்கு ஆதரவு, ஆய்வு, தகவல்

வாஷிங்டன்: மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஜோ பிடனுக்கு ஆதரவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் வரும் நவ.,3ல் அதிபர் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. அந்நாட்டின் இண்டியாஸ்போரா என்ற அமைப்பு சர்வே ஒன்றை நடத்தியது. சர்வேயின் முடிவில் 3ல் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதாவது 66 சதவீத அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று சர்வே முடிவில் தெரியவந்துள்ளது. குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பிற்கு 28 சதவீத இந்தியர்கள் ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அதிக பட்சமாக 1 லட்சத்து 60,000 இந்திய வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக புளோரிடாவில் 87,000 வாக்காளர்களும், பென்சிலவேனியாவில் 61,000 வாக்காளர்களும், சென்ற முறை டிரம்ப் வெற்றி பெற்ற மிக்சிகன் மாகாணத்தில் 45,000 வாக்காளர்களும் உள்ளனர். ஆனால், சென்ற சென்ற தேர்தலில் டிரம்ப் 10,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.


latest tamil news


அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமால ஹாரிஸ் துணை அதிபராக போட்டியிடுவது மற்றும் பிரதமர் மோடி, டிரம்ப் இணைந்த பேரணி வீடியோ இவை இரண்டும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-செப்-202018:10:13 IST Report Abuse
Endrum Indian தானே தனக்கு ஆப்பு வைத்துக் கொள்வது இது தான் பேஷ் அமெரிக்க வாழ் இந்தியன் என்று மீடியா சொல்லும் (அவர்கள் தங்களை அமெரிக்கன் என்று தான் சொல்லிக்கொள்வார்கள்) மக்களே
Rate this:
Cancel
beembai - kovai,இந்தியா
17-செப்-202018:10:00 IST Report Abuse
beembai அப்போ ஹவ்டி மோடி எல்லாம் வேஸ்டா கோப்பால் ? நம்ம எலக்ஷன் கமிஷன் கிட்ட EVM வாங்கிட்டு போய் எலெக்ஷன் நடத்த சொல்லுங்க. ட்ரம்ப்போ, பிடினோ யாரை ஜெயிக்க வைக்கணுமோ அதெல்லாம் அவங்க ஈஸியா செய்வாங்க.
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
17-செப்-202017:17:29 IST Report Abuse
Ramona Joeவந்தால் பாக்,சீனா இரண்டுக்கும் தான் நல்லது, ஜோ வினால் அமெரிக்காவிற்கு பிரயோசனம் கிடையாது, ஒபாமா சொல்ல அவை நடக்கும் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்படும், மேலும் இக்கணிப்பு செயற்கையான ஒன்று, Trump வெற்றி உறுதி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X