பொது செய்தி

தமிழ்நாடு

சீராக உள்ளது எஸ்.பி.பி. உடல்நிலை: மகன் சரண் தகவல்

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
SPB, SP Balasubrahmanyam, Health Condition, corona, covid19

சென்னை : ''எஸ்.பி.பி. உடல்நிலை சீராக இருப்பதால் 'எக்மோ' மற்றும் 'வென்டிலேட்டர்' உதவி நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது'' என அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பிற்குள்ளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்75 ஆக. 5 முதல் சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு 'எக்மோ' உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்கி வருகின்றன. நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் தீவிர சிகிச்சையை மருத்துவக் குழுவினர் அளித்து வருகின்றனர்.


latest tamil news



எஸ்.பி.பி. மகன் சரண் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் 'அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு 'பிசியோதெரபி' தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. 'எக்மோ' மற்றும் 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை தொடர்ந்தாலும் உடல்நிலை சீராகி வருவதால் அது நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது என்ற நம்பிக்கை உள்ளது.மருத்துவ குழுவினருக்கும் அப்பா குணமடைய பிரார்த்தனை செய்துவரும் நலம் விரும்பிகளுக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arunacham - Mumbai,இந்தியா
17-செப்-202017:54:56 IST Report Abuse
arunacham தங்கள் ஆரோக்யம் பூரணமாக பெற்று நிறை வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
17-செப்-202014:36:14 IST Report Abuse
.Dr.A.Joseph தம்பி நீங்கள் பேசுவதை விட அவரின் தற்போதைய நிலையினை ஒரே ஒரு போட்டோ எடுத்து போடுங்கள் எங்களுக்கு அது போதும். உங்களின் பேச்சு வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X