கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி உதவாது; சர்வதேச ஒத்துழைப்பு தேவை: ஐ.நா., | Dinamalar

'கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி உதவாது; சர்வதேச ஒத்துழைப்பு தேவை': ஐ.நா.,

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (6)
Share
நியூயார்க்; '' கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி தீர்வாகாது; உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, பிரச்னைக்கு தீர்வு காண முடியும்,'' என, ஐ.நா.,வின், 75வது பொதுச்சபை கூட்டத்தின் தலைவர், வோல்கன் போஸ்கிர் வலியுறுத்தியுள்ளார்.நேற்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுச் சபையின், 75வது ஆண்டு பொதுக் கூட்டம் துவங்கியது. இதில், முக கவசத்துடன் வந்த,

நியூயார்க்; '' கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி தீர்வாகாது; உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, பிரச்னைக்கு தீர்வு காண முடியும்,'' என, ஐ.நா.,வின், 75வது பொதுச்சபை கூட்டத்தின் தலைவர், வோல்கன் போஸ்கிர் வலியுறுத்தியுள்ளார்.



latest tamil news


நேற்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுச் சபையின், 75வது ஆண்டு பொதுக் கூட்டம் துவங்கியது. இதில், முக கவசத்துடன் வந்த, உறுப்பு நாடுகளின் துாதர்கள், சமூக இடைவெளியுடன் அமர்ந்தனர். இக்கூட்டத்தில், வோல்கன் போஸ்கிர் பேசியதாவது:ஐ.நா.,வின், 75வது ஆண்டு திட்டங்கள் அனைத்தும், கடந்த ஆறு மாதங்களில், கொரோனா பரவலால் மாறிவிட்டன. எத்தகைய அச்சுறுத்தலில் நாம் உள்ளோம் என்பதை, முக கவசங்கள் உணர்த்துகின்றன. இதில் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதையும் நினைவுபடுத்துகின்றன.

எனினும், சில நாடுகள், பன்னாட்டு அமைப்புகளை துாற்றுவதும், உலக நாடுகள் எதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேள்வி கேட்பதையும், நாம் பார்க்கிறோம். இத்தகைய சர்ச்சைகள் எழ காரணங்கள் உண்டு. ஆனால், அவை மூலம் தவறான முடிவுகள் எடுக்கப்படுவது சரியல்ல என்பது தான் என் கருத்து. எந்த நாடும் தனியாகவே அல்லது சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமாகவோ, கொரோனாவை ஒழித்து விட முடியாது. தனித்து செயல்படுவது, கொரோனா பரவலை அதிகரிக்கவே உதவும்.


latest tamil news



தற்போதைய சூழலில், அனைத்து நாடுகள் மற்றும் அமைப்புகள் மீது, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு, நமக்கு உள்ளது. உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.கொரோனா பிரச்னையில் நாம் என்ன தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து, எதிர்காலத்தில் அத்தகைய நிலைமை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஐ.நா.,வை அழிக்க முடியாதுபாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. அதனால், அமெரிக்க அதிபராக, டிரம்ப் மீண்டும் தேர்வானால், ஐ.நா., அமைப்பு நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, ஐ.நா., 75வது ஆண்டு பொதுச் சபை கூட்டத் தலைவர், வோல்கன் போஸ்கிரிடம், செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, '' ஐ.நா.,வின் பின்னால் பல நாடுகள் உள்ளன. ஒரு தனி நபரோ அல்லது ஒரு நாடோ, ஐ.நா.,வை அழிக்க முடியாது. அது இன்னும், 75 ஆண்டுகள் சேவை புரியும்,'' என, வோல்கன் போஸ்கிர் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X