பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்

Added : செப் 17, 2020
Share
Advertisement

கொள்முதல் நிலையம் துவக்கம்

வாலாஜாபாத் - வாலாஜாபாத் அடுத்த, அகரம் கிராமத்தில், 800 ஏக்கரில், நெல் அறுவடை நடந்து வருகிறது. இங்கு, நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக, நேரடி கொள்முதல் நிலையம் துவக்கவில்லை என, விவசாயிகளிடையே புகார் எழுந்தது.இது குறித்து, நம் நாளிதழில், நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து, நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் நேற்று, அகரம் கிராமத்தில், நேரடி கொள்முதல் நிலையத்தை துவக்கினர்.

மின்சாரம் பாய்ந்து மாடு பலி

திருக்கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் அடுத்த, எடையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி செல்லமாள் என்பவரின் கறவை எருமை மாடும், வீரக்குப்பம் கோவிந்தராஜ் என்பவரின் இரண்டு ஆண்டு கன்றுக் குட்டியும், நேற்று முன்தினம் மேய்ச்சலில் இருந்தன.அப்போது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தின் மின் கம்பிகள், காற்று வீசியதில் அறுந்து, கறவை எருமை மாடு, கன்றுக் குட்டியின் மீது விழுந்தன. இதில், மின்சாரம் பாய்ந்து, மாடும், கன்றுக் குட்டியும் அதே இடத்திலேயே இறந்தன

.ஊட்டச்சத்து மாத விழா

திருக்கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பாக, ஊட்டச்சத்து மாத விழா, அதன் திட்ட அலுவலர் ஜானகி தலைமையில், நேற்று துவங்கப்பட்டது.இதில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் செப்., மாதம் முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.மேலும், பெண்கள், கர்ப்பிணிகள், பாலுாட்டும்பெண்கள், ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி,பழங்கள், தானிய வகைகள், கீரைகள் உள்ளிட்டவை உட்கொள்ள வேண்டும் என, நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X