பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் குளங்களில் தர்ப்பணம் செய்ய தடை

Added : செப் 17, 2020
Share
Advertisement

வாலாஜாபாத் : கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில், மஹாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய, ஹிந்து சமய அறநிலையத் துறை தடை விதித்துள்ளது.

வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவில், தென்னகத்தில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு இணையாக, வட ராமேஸ்வரம் என, போற்றப்படுகிறது. இங்கு, மஹாளய அமாவாசை தினத்தன்று, முன்னோருக்கு தர்ப்பணம் அளிக்கும், பரிகாரஸ்தலமாக விளங்கி வருகிறது.

கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில், இன்றைய புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு, கோவிலில் தர்ப்பணம் செய்வதற்கு, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தடை விதித்து உள்ளனர். இதனால், பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், மாமல்லபுரத்தில், ஸ்தலசயன பெருமாள் கோவில், புண்டரீக புஷ்கரணி குளக்கரை பகுதிகளில், பொது மக்கள், மூதாதையரை வழிபடுவர்.இங்கும், பொது மக்கள் குவிந்து, கடல், குளத்தில் நீராட, கடற்கரை, குளக்கரையில் வழிபட, அரசு தடை விதித்துள்ளது.திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர், சங்குதீர்த்த குளத்தில் நீராட, வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X