பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' வாகனம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என, செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லுாயிஸ் தெரிவித்தார்.

அவரது அறிக்கை;அரசின், 'அம்மா' இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில், பல்வேறு நிலைகளில் பணிபுரியும் மகளிருக்கு, மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது. இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில், 18 - 45 வயதுக்கு மிகாமல்உள்ளவர்கள், வாகன ஓட்டுனர் உரிமம், ஆண்டு வருமானம், 2.50 லட்சம் மிகாமல் உள்ளோர், இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களுக்கு, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மகளிர் திட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். தவிர, 044- - 2723 6348 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X