பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கர்ப்பிணிகள் 31 பேருக்கு பிரசவம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதித்த கர்ப்பிணிகள், 31 பேருக்கு, பிரசவம் நடத்தப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, இங்கு, 1,782 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.இதில், 1,431 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 22 பேர் வரை இறந்துள்ளனர். இம்மருத்துவமனையில், 500 படுக்கை வசதி உள்ளது. தற்போது, இங்கு, 13 பேர், கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட கர்ப்பிணிகளில், 205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புதிய கட்டடத்தில், 2வது மாடி, கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.இதில், இதுவரை, 31 பேருக்கு பிரசவம் பார்க்கப்பட்டு, நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.இத்தகவலை திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லுாரி மற்றும் அரசு மருத்துவமனை டீன் அரசி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X