கஞ்சா கடத்தியவர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா கடத்தியவர்கள் கைது

Added : செப் 17, 2020
Share

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து, தமிழகம் நோக்கி இருவர் பயணித்த யமஹா ஆர்15 டூ - வீலரில் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில், இரண்டு கிலோ கஞ்சா சிக்கியது. கஞ்சா மற்றும் டூ -- வீலரை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்திய மணலி லோகேஷ், 25, செங்குன்றம் ஷகில், 25, ஆகிய இருவரை கைது செய்தனர்.ஆந்திர மாநிலம், நாயுடுபேட்டையில் இருந்து, கஞ்சா கடத்தியது தெரிந்தது. ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X