பீர்க்கங்கரணை எஸ்.ஐ., துாக்கிட்டு தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பீர்க்கங்கரணை எஸ்.ஐ., துாக்கிட்டு தற்கொலை

Added : செப் 17, 2020
Share

கீழ்ப்பாக்கம் : கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்த, பீர்க்கங்கரணை உதவி ஆய்வாளர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கீழ்ப்பாக்கம், புல்லாபுரம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி, 58. இவர், பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில், சட்டம் - ஒழுங்கு பிரிவில், உதவி ஆய்வாளராக பணிபுரிந்தார்.இவரது மனைவி திரிபுரசுந்தரி, 54. இவர்களுக்கு நித்யா, 31, சந்தியா, 29, என, இரு மகள்கள் உள்ளனர். உடல் நலக் குறைவு காரணமாக, ஒரு மாதமாக அயப்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டில் தங்கி, தனியார் மருத்துவமனையில், குடல் நோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம், மகள் வீட்டிலிருந்த நரசிம்ம மூர்த்தி, கீழ்ப்பாக்கம் காவல் குடியிருப்பிற்கு சென்றார். பின், அவரது மகளின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், 'என்னால் முடியவில்லை; தற்கொலை செய்து கொள்ள போகிறேன்' எனக் கூறி, இணைப்பை துண்டித்துள்ளார்.தொடர்ந்து, மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கீழ்ப்பாக்கம் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X