தமிழ்நாடு

சென்னையில் 3,000த்தை கடந்தது கொரோனா இறப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

சென்னை : சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தோர் எண்ணிக்கை, 3,000த்தை கடந்தது.

சென்னையில், கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், நேற்று முன்தினம் வரை, 1 லட்சத்து, 50 ஆயிரத்து, 572 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 1 லட்சத்து, 37 ஆயிரத்து, 685 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.பலி எண்ணிக்கை, 3,004 ஆக உள்ளது. தற்போது, 9,883 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில், 1,144 பேர்; ராயபுரத்தில், 828 பேர்; அடையாறில், 827 பேர்; தேனாம்பேட்டையில், 807 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதேபோல், மாநகராட்சியில் நோய் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை, நான்காக குறைந்துள்ளது. இதன்படி, மாதவரம் மண்டலத்தில் மட்டுமே, நோய் கட்டுப்பாடு பகுதிகள் உள்ளன. மற்ற மண்டலங்களில் நோய் கட்டுப்பாடு பகுதிகள் இல்லை என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X