சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி கடன் மோசடி; போலீசார் எச்சரிக்கை

Added : செப் 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வங்கி கடன் மோசடி; போலீசார் எச்சரிக்கை

சென்னை : 'வங்கி கடன் வாங்கித் தருவதாக பேசும் மர்ம நபர்களுக்கு, பதில் அளிக்காமல், தவிர்த்துவிட வேண்டும்' என, போலீசார் கேட்டுக் கொண்டனர்.

சென்னையில், ஒரு கும்பல், வடபழநி உட்பட பல்வேறு இடங்களில், போலி, 'கால்சென்டர்' துவங்கி, அதில், 100க்கும் மேற்பட்ட பெண்களை பணியமர்த்தி, வங்கி கடன் வாங்கித் தருவதாக, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, மோசடி கும்பலைச் சேர்ந்த, 40 பேரை கைது செய்தனர்.

இவர்களில் மூவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.தற்போது, இந்த கும்பலைச் சேர்ந்தோர், மேலும் சில இடங்களில், போலி கால்சென்டர் துவங்கி, மோசடியில் ஈடுபட திட்டமிட்டு இருப்பது, போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இந்த கும்பலிடம் ஏமாற வேண்டாம் என, போலீசார் கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:வங்கி கடன் வாங்கித் தருவதாக, மர்ம நபர்கள் ஆசைக்காட்டி, மோசடி செய்ய முயற்சி செய்து வருவதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. வங்கி கடன் வாங்கித் தருவதாக, மர்ம நபர்கள், மொபைல் போன் வாயிலாக பேசினால், அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்; அவர்களிடம், எந்த தகவல்களையும் பரிமாற வேண்டாம்.ஆனால், எந்த எண்ணில் இருந்து தொடர்பு கொண்டனர் என்ற விபரத்தை, அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-202010:30:00 IST Report Abuse
ஆப்பு எனக்கு ஹெ.டி.எப்.சி பேங்குலேருந்து நேரடியாவே போனில் கூப்புட்டு லோன் தர்ரதா நச்சரிச்சுக்கிட்டே இருக்காங்க. எனக்கு கொரோனா முடக்கத்துலே வேலை போயிடுச்சுன்னு சொன்னாலும் அப்பத்திக்கு சாரி சொல்லிட்டு ரெண்டுநாள் கழிச்சு திரும்பவும் நச்சரிக்கறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X