சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.107 கோடிக்கு போலி 'பில்' ஜி.எஸ்.டி., மோசடி நபர் கைது

Added : செப் 17, 2020
Share
Advertisement

சென்னை : போலியாக, ஜி.எஸ்.டி., பில் தயாரித்து, 107 கோடி ரூபாய் வரை, வரி மோசடி செய்தது தொடர்பாக, சென்னை புறநகர் ஜி.எஸ்.டி., அலுவலகம், ஒருவரை கைது செய்துள்ளது.

இது குறித்து, சென்னை புறநகர் ஜி.எஸ்.டி., அலுவலக கமிஷனர் ரவீந்திரநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஜி.எஸ்.டி.,யில், வரிச்சலுகை பெறுவதற்காக, போலி நிறுவனங்கள் உருவாக்கி, அதன் பெயரில், பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த விஷயத்தில் தொடர்பில்லாத பல்வேறு நபர்களின் பான் கார்டுகளை பயன்படுத்தி, ஜி.எஸ்.டி., எண் பெற்றுள்ளனர்.

உண்மையான பொருட்களை வினியோகம் செய்யாமல், 740 கோடி ரூபாய்க்கு போலி பில் தயாரித்து, 107 கோடி ரூபாய் உள்ளீட்டு வரிச்சலுகை பெற்றுள்ளனர்.இது தொடர்பாக, சென்னை, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X