சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் தடையை கண்டித்து எண்ணுாரில் ஆர்ப்பாட்டம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

எண்ணுார் : மாநகராட்சி குப்பை தரம் பிரிக்கும் கூடம் விரிவாக்க பணி காரணமாக, மின் ஒயர் சேதமடைந்து, மின் தடையானதால், ஆத்திரமடைந்த மின் ஊழியர்கள் குடும்பத்தினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை, எண்ணுார், அனல் மின் நிலைய குடியிருப்பு, 2ல், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, அனல் மின் நிலைய ஊழியர்கள், மின் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.இக்குடியிருப்பை ஒட்டி, தெருவோரம், மாநகராட்சியின் குப்பை தரம் பிரிக்கும் கூடம் உள்ளது. அதன் விரிவாக்கப் பணிகள், நேற்று முன்தினம் மதியம் நடந்து கொண்டிருந்தது.

அங்கு, பள்ளம் தோண்டிய போது, பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த மின் வடம் சேதமடைந்தது. இதில், குடியிருப்பு, 2ன், அனைத்து வீடுகளிலும், மின் தடை ஏற்பட்டது.இரவு முழுதும் மின்சாரமின்றி தவித்த குடியிருப்பு வாசிகள், நேற்று காலை, குடியிருப்பு வளாகத்தில், தங்கள் குடும்பத்துடன், திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாநகராட்சி குப்பை தரம் பிரிக்கும் கூடம் விரிவாக்க பணியால், சேதமடைந்த மின் வடத்தை சரி செய்து, மின் தடையை நீக்க வேண்டும். கடும் துர்நாற்றம் வீசும், குப்பை தரம் பிரிக்கும் கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, கோஷமிட்டனர்.இச்சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது. மின் ஊழியர்கள் பல மணி நேரம் போராடி, மாலை, 6:00 மணிக்கு மேல் நிலைமையை சீர்செய்தனர். 35 மணி நேர மின் தடையால், தண்ணீரின்றியும், 'ஆன்லைன்' வகுப்புகளை மாணவர்கள் தொடர முடியாமலும் தவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X