பொது செய்தி

தமிழ்நாடு

ஆவடி பசுமை பூங்காவில் விரைவில் படகு போட்டி

Added : செப் 17, 2020
Share
Advertisement

ஆவடி : ''ஆவடி பசுமை பூங்காவில், படகு போட்டி நடத்தப்படும்,'' என, அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

ஆவடியில், 28.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 87.06 ஏக்கர் பரப்பிலான பருத்திப்பட்டு ஏரியை புனரமைத்து, பசுமை பூங்கா அமைக்கப்பட்டது.இந்த பூங்கா, 2019, ஜூன், 21ம் தேதி முதல், மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, மார்ச்சில் மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வை அடுத்து, நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது.இன்று முதல், ஏரியில் படகு சவாரி செய்ய, மக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில், ஏரி மற்றும் பூங்காவில், அமைச்சர் பாண்டியராஜன், நேற்று முன்தினம் இரவு, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இது குறித்து, அவர் கூறியதாவது:பருத்திப்பட்டு ஏரியில், படகு சவாரி செய்ய, படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால், தடை செய்யப்பட்டு இருந்த படகு சவாரி, மீண்டும் துவங்க உள்ளது. படகு சவாரி செய்வதை துாண்ட, ஆண்களுக்கும், பெண்களுக்கும், படகு போட்டி நடத்த திட்டமிடப்படுகிறது.

விரைவில் பருத்திப்பட்டு ஏரியில், படகு போட்டி நடத்தப்படும்.ஏரிக்கரையில் உள்ள, 36 எம்.எல்.டி., கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம், ஏரியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்கப்படுகிறது.அடுத்தக்கட்டமாக, ஏரியின் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X