பொது செய்தி

தமிழ்நாடு

பல்லாவரம் மக்களை பந்தாடும் 'ஆபீசர்ஸ்'; சான்றிதழ்கள் பெற தவம் கிடக்கும் அவலம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

பல்லாவரம் : பஸ் போக்குவரத்து இல்லாத, ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் உள்ள பல்லாவரம் தாசில்தார் அலுவலகத்தில், சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் மக்களை, அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஆலந்துாரில் இருந்து பல்லாவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை பிரித்து, 2017ல், பல்லாவரம் தாசில்தார் அலுவலகம் உருவாக்கப்பட்டது.ஜமீன் ராயப்பேட்டையில், 50 சென்ட் நிலத்தில், 1.61 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு, புதிய தாசில்தார் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.இந்த அலுவலகத்திற்கு வந்து செல்ல, போதிய பேருந்து வசதி இல்லை.

பல்லாவரம், குரோம்பேட்டை நிறுத்தங்களில் இருந்து, துரைப்பாக்கம் சாலை வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறி, வேல்ஸ் கல்லுாரி சிக்னலில் இறங்கி, ௫௦௦ மீட்டர் துாரத்திற்கு மேல் நடந்து செல்ல வேண்டியுள்ளது.இதனால், முதியவர்கள், பெண்கள் பெரும் சிரமப்படுகின்றனர். மற்றொரு புறம், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தால், அதை வாங்குவதற்கு, நடையாய் நடக்க வேண்டியுள்ளது.இது சம்பந்தமாக, தாசில்தாரிடம் புகார் தெரிவித்தால், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.இது குறித்து, அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் கூறுகையில், ''பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவு சான்றிதழ் பெற, ஆக., 19ம் தேதி விண்ணப்பித்தேன். ஆனால், இன்றுவரை, சான்றிதழ் கிடைக்காததால், நடையாய் நடக்கிறேன்'' என்றார்.

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம், பட்டா பிரிவில், புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எந்த ஒரு வேலையும், புரோக்கர்கள் மூலம் சென்றால் மட்டுமே, அதிகாரிகள் செய்வதாகவும், இந்த அலுவலகத்தில், லஞ்சம் கரைபுரளுவதாகவும் புகார் எழுந்துள்ளது.சமீப நாட்களாக, தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்டை நடத்தி வரும், லஞ்ச ஒழிப்பு போலீசார், பல்லாவரம் தாலுகா அலுவலகம் பக்கமும் தங்கள் பார்வையை திருப்ப வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X