பொது செய்தி

தமிழ்நாடு

எம்.டி.சி., சார்பில் இலகுரக ஓட்டுனர் பயிற்சி

Added : செப் 17, 2020
Share
Advertisement

சென்னை : சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக ஓட்டுனர் பயிற்சி மையத்தில், இலகுரக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளதாவது:சென்னை, குரோம்பேட்டையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கனரக வாகன ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி செயல்படுகிறது.தற்போது, இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சியும் அளிக்கப்பட்டு, ஓட்டுனர் உரிமம் பெற்றுத் தரப்படுகிறது. இருபாலரும் பயிற்சி பெற்று பயனடையலாம்.

இலகுரக வாகனம் ஓட்ட, ஒரு மாதமும், கனரக வாகனம் ஓட்ட, மூன்று மாதங்களும், பயிற்சி அளிக்கப்படுகிறது. தனியார் பயிற்சிப் பள்ளிகளை விட, குறைந்த கட்டணத்தில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும் தகவல்களுக்கு, முதல்வர், மாநகர் போக்குவரத்துக் கழக ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி, காந்தி நகர், குரோம்பேட்டை, என்ற முகவரியிலோ அல்லது, 044- - 2953 ௫177 என்ற தொலைபேசி அல்லது, 94450 30597 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X