தமிழ்நாடு

பல்லாவரம் மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்

Added : செப் 17, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 பல்லாவரம் மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்

பல்லாவரம் : பல்லாவரத்தில், 82.6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, முதல்வர் இ.பி.எஸ்., இன்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

பல்லாவரத்தில், குன்றத்துார் சாலை, பழைய சந்தை சாலை, வெட்டர் லைன் ஆகிய சந்திப்புகளில், தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதனால், அங்கு, 'பீக் ஹவர்' நேரத்தில், கடும் நெரிசல் தொடர்ந்தது.பல ஆண்டுகளாக நீடித்து வந்த இப்பிரச்னைக்கு தீர்வாக, 82.6 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் கட்டும் பணி, 2016ல் துவங்கியது. இது, மூன்று வழிப்பாதை கொண்ட, ஒரு வழி மேம்பாலமாகும்.

அதாவது, ஜி.எஸ்.டி., சாலையில், பல்லாவரத்தில் இருந்து கிண்டி செல்லும் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில், ஒரு வழி வடிவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் நீளம், 1.5 கி.மீ., இம்மேம்பாலம் கட்டும் பணி முடிந்த நிலையில், முதல்வர் இ.பி.எஸ்., இன்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

பல்லாவரத்திற்கு வரும் முதல்வருக்கு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ., தன்சிங் ஆகியோர் தலைமையில், வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-செப்-202009:39:21 IST Report Abuse
பாமரன் Useless project and planning.. கிண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் கீழ்மட்ட பாதையில் பல்லாவரத்தை கடப்பது நரகவேதனை. ஏர்போர்ட் எதிரில் உள்ளது போல் ரோடு அகலமாக இருந்தாலாவது பரவாயில்லை. இந்த பாலம் முடியும் இடத்தில் எதிராக வரும் வாகனங்களுக்கான பாதை மிகவும் குறுகியது... கிட்டத்தட்ட ஒரு பஸ் மட்டுமே செல்ல முடியும்... வெள்ளிக்கிழமை இங்கே சந்தை நடக்கும் போது நிலைமை மிகவும் மோசமாகி விடும்... இரு வழி பாதையாக மேல்மட்ட பாதையை மாற்றுவதுதான் ஒரே தீர்வு...
Rate this:
Cancel
17-செப்-202015:31:52 IST Report Abuse
Ganesan Madurai எதுக்கு முதல்வருக்கு தேவையில்லாம வரவேற்பு மக்கள் வரிப்பணத்தில். அவர் வேலையே அதுதானே.
Rate this:
Cancel
Raja -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202007:14:51 IST Report Abuse
Raja What is the use of one-way bridge? As usual there will be traffic jam towards Tamaram. Improper planning.
Rate this:
Dinesh - ,
17-செப்-202010:44:40 IST Report Abuse
DineshSomething is better than nothing...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X