பொது செய்தி

இந்தியா

ஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில், பல ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்து வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கான மசோதா, லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், குரல் ஓட்டெடுப்பு மூலம், நேற்று ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது.ஆயுர்வேதா குறித்து மத்திய சுகாதார
ayurveda institiutes, national importance, bill, passed, ஆயுர்வேதா கல்வி நிறுவனங்கள், தேசிய முக்கியத்துவம், மசோதா, நிறைவேற்றம்

புதுடில்லி: குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில், பல ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்து வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கான மசோதா, லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், குரல் ஓட்டெடுப்பு மூலம், நேற்று ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது.

ஆயுர்வேதா குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறுகையில், ‛ ஆயுர்வேத வைத்தியமுறை சமூகத்திற்கும் உலகளாவிய ஆரோக்கிய அமைப்புகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இது பழமையான வைத்திய முறை இதில் பாரம்பரியம் மிக்க அறிவார்ந்த விஷயங்கள் அடங்கி உள்ளன. '


latest tamil news



‛மேலும் அத்மானிர்பார் திட்டத்தின் கீழ் மூலிகைச் செடிகள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ 4000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் நெடுங்காலமாக உலக சுகாதார அமைப்புடன் இணந்து செயல்படுகின்றன. 65 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆயுர்வேத நிறுவனங்களில் சேர்ந்து பயின்று வருகின்றனர்' இவ்வாறு அவர் தெரிவித்தார்

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-செப்-202009:42:26 IST Report Abuse
ஆரூர் ரங் கேரளாவில் ஆயுர்வேத கிளினிக் இல்லாத கிராமமே கிடையாது . இங்கு சித்த மருத்துவம்னு பெயர்பலகையை பார்ப்பதே அபூர்வம் .அப்படியே இருந்தாலும் நாட்டுமருத்துவம் படித்ததாக போர்டு போட்டுகொண்டு ஆங்கில மருந்து ப்ரிஸ்க்ரிப்ஷனே எழுதித்தருகிறார்கள் எக்ஸ்ரே ஸ்கான் கூட எடுத்துவரச்சொல்கிறார்கள். இதனை நவீன MBBSமருத்துவர்கள் எதிர்த்தபோது நாட்டு மருத்துவர்கள் கோர்ட்டுக்குப்போய் ஆங்கில மருத்துவம் பார்க்க உரிமை பெற்றார்கள் . தங்களது மருத்துவத்திலேயே சித்த மருத்துவர்களுக்கு நம்பிக்கை குறைவாக இருந்தால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-செப்-202015:07:26 IST Report Abuse
தமிழவேல் மத்திய அரசு அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே நாடுமுழுதும் நன்றாக வளரும்....
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
17-செப்-202008:46:22 IST Report Abuse
Sampath Kumar அய்யா ரங்கு எப்பதான் சரியாய் சொல்லுற நன்றி
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-செப்-202008:20:59 IST Report Abuse
ஆரூர் ரங் அந்நிய மருத்துவக் கல்விக்கான நீட்டுக்குப் போராடுவதற்கு பதில் 100தமிழ் சித்த மருத்துவக் கல்லூரிகளை அரசு நிறுவி தமிழ் மருத்துவர்களை உருவாக்கலாமே . கல்லூரி உருவாக்கும் மற்றும்நடத்தும் செலவுகளும் குறைவு .தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றாக்கினால் வேற்று ஆட்களுக்கு இடம் கொடுத்து விட்டதாகப் புகாரும வராது . வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் மத்திய நிதியில் உருவான தாம்பரம் தேசீய சித்தமருத்துவ நிறுவனத்தில் வளர்ச்சி சொல்லிகொள்ளும்படி இல்லை .முக்கிய காரணம் தமிழ் தமிழ் என மொழிப்பிழைப்பு அரசியல் நடத்துபவர்களே அங்கு சிகிச்சைக்கு வருவதில்லை . திமுக கூட தம் தொண்டர்கள் சித்த மருத்துவம் மட்டுமே பயன்படுத்தி பச்சைத் தமிழர்கள் என்பதை உறுதிப்படுத்தச்சொல்லாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X