புதுடில்லி: குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில், பல ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்து வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கான மசோதா, லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், குரல் ஓட்டெடுப்பு மூலம், நேற்று ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது.
ஆயுர்வேதா குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறுகையில், ‛ ஆயுர்வேத வைத்தியமுறை சமூகத்திற்கும் உலகளாவிய ஆரோக்கிய அமைப்புகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இது பழமையான வைத்திய முறை இதில் பாரம்பரியம் மிக்க அறிவார்ந்த விஷயங்கள் அடங்கி உள்ளன. '

‛மேலும் அத்மானிர்பார் திட்டத்தின் கீழ் மூலிகைச் செடிகள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ 4000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் நெடுங்காலமாக உலக சுகாதார அமைப்புடன் இணந்து செயல்படுகின்றன. 65 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆயுர்வேத நிறுவனங்களில் சேர்ந்து பயின்று வருகின்றனர்' இவ்வாறு அவர் தெரிவித்தார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE