செப்.,17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020
Share

சென்னை: தமிழகத்தில், இன்று (செப்.,17), பெட்ரோல் லிட்டருக்கு 84.44 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.73 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



பொதுத் துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.57ரூபாய், டீசல் லிட்டர் 77.91ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து, 84.44 ரூபாய், டீசல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து, 77.73ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X