புதுடில்லி: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில ஜவுளிகளுக்கு, அமெரிக்கா தடை விதித்திருப்பது, இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என தர நிர்ணய நிறுவனமான, 'இக்ரா' தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: சீனாவின், ஜின்ஜியாங் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில தயாரிப்புகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அப்பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக, மனிதாபிமானமற்ற முறையில், மக்கள் உழைப்பில் ஈடுபடுத்தப்படுவதால், இந்த தடையை அமெரிக்கா விதித்துள்ளது.

சீனாவின் மொத்த பருத்தி உற்பத்தியில், ஜின்ஜியாங் பங்கு, 80 - 85 சதவீதம் ஆகும். இந்தியாவின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் பலருக்கு, ஏற்கனவே அதிக ஆர்டர்கள் வரத் துவங்கியுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த தடை, இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு, இக்ரா தெரிவித்துள்ளது.