பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாள் விழா: கோவில்களில் பூஜை, நலத்திட்ட உதவி வழங்கல்

Added : செப் 17, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சியில், பிரதமர் மோடியின், 70 வது பிறந்தநாள் விழாவையொட்டி, இன்று காலை, 8:00 மணிக்கு ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது.
ஈரோடு தெற்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் சிவசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதையடுத்து நால்ரோட்டில், பா.ஜ., சார்பில் கொடியேற்று விழா நடக்கிறது. மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை, 10:00 மணிக்கு மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் கொரோனா தடுப்பு சிறப்பு உடை வழங்கப்பட்டு, அங்குள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. 10:30 மணிக்கு மொடக்குறிச்சி, பா.ஜ., அலுவலகத்தில் இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெறுகிறது. பின்னர் மேற்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில், ரத்ததானம் வழங்கப்படுகிறது. நஞ்சை ஊத்துக்குளி, அரச்சலூர், அவல்பூந்துறை, வடுகப்பட்டி உள்ளிட்ட இடங்களில், கொடியேற்று விழா மற்றும் இனிப்பு வழங்குதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதுடன், அன்னதானம் வழங்கவும் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு ஒன்றிய தலைவர் செல்வகுமார், தெற்கு ஒன்றிய தலைவர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

கொடுமுடி, பா.ஜ., சார்பில் ஒன்றிய தலைவர் சேகர் தலைமையில், மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், முன்னாள் மேற்கு வங்க ஆளுனர் சண்முகநாதன் ஆகியோர் காலை, 8:15 மணிக்கு கொளாநல்லியில் கொடியேற்றி துவக்கி வைப்பதுடன், ஒத்தக்கடை, புது பஸ் ஸ்டான்ட், மணிக்கூண்டு, கொடுமுடி நுழைவு பாலம், காசிப்பாளையம் பகுதியில் நடக்கும் மோடி பிறந்தநாள் விழா நிகழ்ச்சயில் கலந்து கொள்கின்றனர். பின்னர் தன்னாட்சி அப்பன் கோவில் தெரு வழியாக சென்று, அங்குள்ள கோவிலில் பூஜை செய்து, பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்குவதுடன், ஆயுஷ்மான் இன்சூரன்ஸ் சிறப்பு திட்டத்தையும் துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மோடியின் சாதனைகளை எடுத்துரைக்கின்றனர்.

மோடியும் மக்கள் பாசமும்:

பேரிடர் படை: குஜராத்தின் கட்ச்சில் 2001 ஜன., 26ல் பூகம்பம் ஏற்பட்ட போது, பல்வேறு குழுக்கள் அமைத்து பணியாற்றினார் முதல்வர் மோடி. நாட்டில் முதன்முதலாக 2003ல் பேரிடர் மீட்பு படையை உருவாக்கினார். இதன் அடிப்படையில், 2006ல் மத்திய அரசு தேசிய மீட்பு படையை உருவாக்கியது.

மக்கள் பாசம்: மோடி எங்கு சென்றாலும் சிறப்பு. அமெரிக்காவின் மடிசன் சதுக்கம் (19 ஆயிரம் பேர்), டெக்சாஸில் 'ஹவுடி மோடி' (50 ஆயிரம் பேர்), பிரிட்டனின் வெம்ப்ளி மைதானம் (60 ஆயிரம்) , ஆஸ்திரேலியாவின் சிட்னி அப்போன்ஸ் அரினா மைதானத்தில் (20 ஆயிரம்) வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர்.

குஜராத் 'மாடல்': நாட்டின் முன்மாதிரி மாநிலமாக குஜராத்தை மாற்றினார். 2010ல் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகில் வேகமாக வளரும் மாநிலங்களின் பட்டியலில் குஜராத் மூன்றாம் இடம் பிடித்தது.


2008 அக்., : மேற்கு வங்கத்தில் மறுக்கப்பட்ட டாடா நானோ கார் தொழிற்சாலையை குஜராத்தில் தொடங்க அனுமதித்தார்.


2017 செப்., 17: அணை உயரம், 397ல் இருந்து, 455 அடியாக உயர்த்தப்பட்ட உலகின் இரண்டாவது பெரிய சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்தார்.

ஈரோட்டில் கொண்டாட்டம்: ஈரோடு, கருங்கல்பாளையம் கமலா நகரில், பகுதி பொறுப்பாளர் கதிர்வேல் தலைமையில் இன்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. கொல்லம்பாளையம் மாரியம்மன் கோவிலில் காலை, 8:00 மணிக்கு பூஜை. 500 பேருக்கு அன்னதானம் முன்னாள் எம்.பி. சவுந்திரம் சார்பில் வழங்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி, 60வது வார்டில் ஆசிரியர் அணி சார்பில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி, அன்னதானம் வழங்கல், மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவிலில் காலை, 7:30 மணிக்கு பூஜை மண்டல தலைவர் ஈஸ்வர மூர்த்தி தலைமையில் நடக்கிறது. ஈரோடு மாநகரில், மரம் நடும் விழா மாவட்ட மகளிரணி தலைவி புனிதம் ஐயப்பன் சார்பில், ஒவ்வொரு மண்டலுக்கும் தலா, 50 மரக்கன்றுகள் என, 16 மண்டலுக்கு, 800 மரக்கன்று வழங்கப்பட்டு நேற்று முன்தினம் நடப்பட்டது. காசிபாளையம் முருகன் கோவிலில், மேற்கு பகுதி மண்டல தலைவர் சுப்பிரமணி தலைமையில் பூஜை நடக்கிறது. இன்று காலை, 7:30 மணிக்கு ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி மாவட்ட மகளிரணி சார்பில் நடக்கிறது. பா.ஜ. அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின், மாநில தலைவர் பாண்டிதுரை தலைமையில் மொடக்குறிச்சியில் கொடியேற்று விழா நேற்று நடந்தது. 70 ஆண்கள், 70 பெண்களுக்கு இலவசமாக வேடடி, சேலை வழங்கப்பட்டது.Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X