பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணை: போலீஸ் விசாரணை

Added : செப் 17, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், அரசு மேல்நிலைப்பள்ளியில் அலுவலக உதவியாளர் பணிக்கு, போலி நியமன ஆணை தயாரித்து வழங்கிய மர்ம நபர் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஈரோடு எஸ்.பி.,யிடம் புகாரளித்துள்ளார்.


ஈரோடு, ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசியை தேன்மொழியிடம், கடந்த, 1ல் ஈரோட்டை சேர்ந்த சந்தோஷ், 29, அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு, தன்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நியமித்துள்ளதாக கூறி, பணி ஆணையை வழங்கியுள்ளார். அதில், அரசு துறைகளில் வழங்குவதை போலவே, ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதிய விபரம், முகவரி, முதன்மை கல்வி அலுவலர் கையெழுத்து, கண்காணிப்பாளர் கையெழுத்து இருந்தது. ஆனால், முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்து மட்டும் சற்று மாற்றம் இருந்ததால், உஷாரான தலைமையாசிரியை, உடனடியாக முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பணி ஆணை குறித்து விபரம் கூறினார். ஆனால், அதிகாரிகள் அதுபோன்ற பணி ஆணை, இந்தாண்டில் யாருக்கும் வழங்கவில்லை என கூறியதால், தலைமையாசிரியை அதிர்ச்சியடைந்து, அவரை முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், பணி ஆணையை வாங்கி ஆய்வு செய்தபோது, அது போலியானது என, உறுதி செய்தனர். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், ஈரோட்டை சேர்ந்த ஒரு மர்ம நபர், ரயில்வே காலனி அரசுப்பள்ளியில், அலுவலக உதவியாளர் பணி காலியாக உள்ளதாகவும், அதற்கு, ஏழு லட்சம் ரூபாய் கொடுத்தால் பணி ஆணை வழங்குவதாக கூறியுள்ளார். முன்பணமாக, மூன்று லட்சம் கொடுக்க வேண்டும். மீதமுள்ள பணத்தை, பணி கிடைத்ததும் வழங்கினால் போதும் என கூறியுள்ளார். சந்தோஷ், அவரது பெற்றோர் மூலம் அந்த நபருக்கு, மூன்று லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அந்த நபரே பணி ஆணை தயாரித்து, முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்திட்டு வழங்கியது தெரியவந்தது. இதுகுறித்து, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி பாலமுரளி, ஈரோடு எஸ்.பி., தங்கதுரையிடம் நேரடியாக சென்று, 10 நாட்களுக்கு முன் புகாரளித்தார். இதையடுத்து, சந்தோஷிடம் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி நியமன ஆணை வழங்கியவர் யார்? ஆளும் கட்சி பிரமுகரா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வாய் திறக்க மறுக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X