பொது செய்தி

தமிழ்நாடு

கொடுமணலில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

சென்னிமலை: சென்னிமலை அருகே நடந்து வரும் அகழாய்வு பணியில், பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால், பல்வேறு கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. தற்போது, இந்திய தொல்லியல் துறை திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் தலைமையில், உதவி தொல்லியலாளர் நந்தகுமார், தொல்லியல் வல்லுனர் சுப்பிரமணியம் ஆகியோர் மேற்பார்வையில், கொடுமணல் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அணிகலன்கள் தயார் செய்த தொழிற்சாலைகள், வெள்ளி, செம்பு நாணயங்கள், சூது பவள கல்மணிகள், வாள், சிறிய கத்திகள், மண் குவளை, மண் ஜாடிகள் உள்பட ஏராளமான பொருட்களை கண்டுபிடித்தனர். தற்போது, கல்லறைகள் இருந்த பகுதியில் ஆய்வு செய்த போது, பெரிய அளவிலான மூன்று முதுமக்கள் தாழிகள் மண்ணில் புதைந்து கிடந்தன. இதில், ஒரு பானையை நேற்று முன்தினம் புதுச்சேரி பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜன் தலைமையில், கீழடி அகழாய்வு துறை துணை இயக்குனர் சிவானந்தம், கீழடி அகழாய்வாளர் பாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். மண் நிரம்பி கிடந்த அந்த பானையில், (முதுமக்கள் தாழி) மனிதனின் உடைந்த மண்டை ஓடுகள் மற்றும் கை, கால் எலும்புகள் ஆகியவை இருந்தன. இதில் சில மாதிரிகளை டி.என்.ஏ. பரிசோதனைக்காக ஆய்வுக்குழுவினர், மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் உள்ள ஆய்வு கூடத்திற்கு எடுத்து சென்றனர். தற்போதைய ஆய்வில், கல்மணிகளும், பிராமி எழுத்துக்களையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த அகழாய்வு பணி வரும், 30 வரை நடைபெறும். இத்தகவலை, இந்திய தொல்லியல் துறை திட்ட இயக்குனர் ரஞ்சித் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X