பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

Added : செப் 17, 2020
Share
Advertisement

ஈரோடு: இந்திய அரசு மேம்பாட்டு தேசிய வளர்ச்சி நிறுவனம் அளிக்கும், குறுகிய கால தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும், 21 முதல், 28 வரை ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள, ஜெம் ஜூவல்லரி டெக்னாலஜி டிரைனிங் சென்டரில் நடக்கிறது. பயிற்சி முடித்தவர்கள் தேசிய, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். மேலும் சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். 18 வயது நிரம்பிய இருபாலரும் சேரலாம். கல்வி தகுதி தேவையில்லை. பயிற்சி இறுதியில், இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் நோட்டு, பேனா மற்றும் செய்முறைக்கான டூல்கிட் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவர்கள் மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்டணம் ரூ.5500/- (விண்ணப்ப கட்டணம் ரூ.100 தனி) உடன் வரும் 21ல் நேரில் வரவும். சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரம் பெற, 94437 28438 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X