பொது செய்தி

தமிழ்நாடு

வனத்தில் 135 பறவை இனம் 118 வண்ணத்து பூச்சிகள் பதிவு

Added : செப் 17, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட காப்புக்காடுகளில் கடந்த, 12, 13ல் பறவைகள் மற்றும் வண்ணத்து பூச்சிகளுக்கான கணக்கெடுப்பு பணி நடந்தது.


ஈரோடு மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் தலைமையில், இயற்கை மற்றும் வண்ணத்து பூச்சி சமூக ஆர்வலர்கள், வனத்துறையினர் என, 50 பேர் ஐந்து குழுவாக பங்கேற்றனர். இது குறித்து, விஸ்மிஜூ விஸ்வநாதன் கூறியதாவது: ஈரோடு வனக்கோட்டத்தில், 'பிளூஸ்' மற்றும் 'கிரவ்ஸ்' வகை வண்ணத்து பூச்சி இனங்கள், பெரிய அளவில் இடம் பெயரும் பருவத்தின் துவக்கம் என்பதால், பறவைகள், வண்ணத்து பூச்சிகளுக்கான கணக்கெடுப்பு நடத்த ஏதுவாக இருந்தது. இறுதியாக, 135 பறவை இனங்களும், 118 வண்ணத்து பூச்சி இனங்களும் பதிவு செய்யப்பட்டன. பறவை இனங்களில், நீர் ஆதாரத்தை வாழ்விடமாக கொண்டு, 13 இனங்கள், ஆறு வேட்டையாடும் பறவை இனங்கள், ஆறு ஆந்தை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில், 'கறுப்பு தலை கொக்கு, பச்சை புறா, பிரவுன் மீன் ஆந்தை' உட்பட அரிய வகை பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கணக்கெடுப்பின்போது மேகமூட்டமாக இருந்ததால், சிறப்பாக செயல்படுத்த முடிந்தது. இயற்கை மற்றும் வண்ணத்து பூச்சி சமூக ஆர்வலர் தலைவர் பாவேந்தன், 'பறவைகள், வண்ணத்து பூச்சிகளின் பாதுகாப்பு, அதன் அவசியம் பற்றி' கலந்துரையாடினார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X