சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதை வளைவில், பழுதாகி நின்ற மக்காச்சோள லோடு லாரியால், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம், மைசூருவில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு, பொள்ளாச்சி நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை, 3:00 மணியளவில் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் தேசிய நெடுஞ்சாலையில், ஒன்பதாவது மலைப்பாதை வளைவில் லாரியை ஓட்டுனர் திருப்ப முயற்சித்தபோது, லாரியில் பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதனால், மலைப்பாதையில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. பண்ணாரி மற்றும் ஆசனூர் சோதனை சாவடிகளில், கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஆசனூர் போலீசார், போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, லாரி நகர்த்தி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 6:00 மணியளவில் இரு மாநில போக்குவரத்து சீரானது. இதனால், மலைப்பாதையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X