பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் 'பிளாஸ்மா' ரத்த வங்கி

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020
Share
Advertisement

சேலம்: அரசு மருத்துவமனையில், 'பிளாஸ்மா' ரத்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்க, 'பிளாஸ்மா ரத்த வங்கி' நேற்று தொடங்கப்பட்டது. டீன் பாலாஜிநாதன், பிளாஸ்மா வங்கியை தொடங்கிவைத்தார். அங்கு, ஓய்வு பெற்ற மருத்துவர் செல்வகளஞ்சியம், முதன்முதலாக ரத்ததானம் செய்தார். டீன் பாலாஜிநாதன் கூறியதாவது: தொற்றில் இருந்து விடுபட்டவர்களிடம், பெறப்படும், 600 மி.லி., ரத்தம், மூன்று நோயாளிக்கு, தலா, 200 மி.லி., வீதம் செலுத்தலாம். மொத்தம், 300 நோயாளிகளுக்கு தேவையான ரத்தத்தை சேமிக்கும் அளவில், பிளாஸ்மா வங்கியில் வசதி உள்ளது. பிளாஸ்மா சிகிச்சை தொடங்க, அரசு உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தகுதி என்ன? பிளாஸ்மா தானம் செய்பவர், 18 முதல், 65 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். தொற்றால் குணமடைந்தவர், எதிர்மறையான பரிசோதனை முடிவு பெறப்பட்ட நாளில் இருந்து, 14வது நாள், பிளாஸ்மா தானம் செய்ய தகுதி உடையவர். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர், புற்றுநோய், சிறுநீரகம் நோய்களால் பாதிக்கப்பட்டோர், பிளாஸ்மா தானம் வழங்கக்கூடாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X