பொது செய்தி

தமிழ்நாடு

திட்டப்பணியை தொய்வின்றி முடிக்க கலெக்டர் அறிவுரை

Added : செப் 17, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில், மத்திய, மாநில அரசின் திட்டப்பணி குறித்து, சேலம் கலெக்டர் ராமன், நேற்று, ஆய்வு செய்தார். அப்போது, தேசிய ஊரக வேலை திட்டத்தில், நடப்பாண்டில், 20.78 கோடி ரூபாயில், 1,691 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாய நிலங்களில் மண்கரை, கல் கரை அமைத்தல், தென்னை மரம் மண் அணைப்பு, பண்ணை குட்டை போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும். மொத்தம் உள்ள, 268 சாலைகளில், 150 சாலை பணிகள் முடிந்துள்ளது. இச்சாலைகளின் இருபுறமும், ஊரக வேலை திட்டத்தில், மரக்கன்றுகள் நட வேண்டும். மேலும், 2016 முதல், 2018 வரை, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கிய, 864 பயனாளிகளில், 38 பேர் பணியை முடிக்கவில்லை. 2019 - 20ல், 251 வீடுகளில், 134 வீடுகள் பணி முடியவில்லை. இப்பணியை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க வேண்டும். மத்திய, மாநில அரசு திட்டப்பணிகளை, தொய்வின்றி குறிப்பிட்ட காலக்கெடுவில் முடிக்க வேண்டும் என, பி.டி.ஓ., உள்ளிட்ட அலுவலர்களிடம், கலெக்டர் அறிவுறுத்தினார்.


இட அளவீடுக்கு கோரிக்கை: ஆத்தூர் ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி திட்டப்பணி குறித்து, கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அப்போது, அம்மம்பாளையத்தை சேர்ந்த, நரிக்குறவ சமுதாயத்தினர், கலெக்டர் காரை சூழ்ந்தனர். அப்போது, அவர்கள் கூறுகையில், 'கடந்த, 15 ஆண்டுக்கு முன், அப்பமசமுத்திரத்தில், எங்கள் சமுதாயத்தினர், 40 பேருக்கு இடம் வழங்கப்பட்டது. இதுவரை இடம் அளவீடு செய்யவில்லை. அதற்கு நடவடிக்கை எடுத்து, தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும்' எனக்கூறினர். இதையடுத்து, தாசில்தார் அன்புசெழியனிடம், 'இவர்கள் இடத்தை அளவீடு செய்வது, வீடு கட்டும் பணி குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க வேண்டும்' என, கலெக்டர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X