பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்கள்

Added : செப் 17, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: ஒன்றிய கூட்டத்தை புறக்கணித்த, தி.மு.க., கவுன்சிலர்கள், சரிசமமாக நிதி ஒதுக்க வலியுறுத்தினர். பனமரத்துப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம், நேற்று நடந்தது. தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். கூட்டம் தொடங்கிய சற்று நேரத்தில், அனைத்து வார்டுக்கும் சரி சமமாக நிதியை பிரித்து ஒதுக்க, தி.மு.க., கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை வலியுறுத்தி, அக்கட்சியின், துணை தலைவர் குமார் தலைமையில், தி.மு.க., கவுன்சிலர்கள் சங்கர், லதா, பிரியா, வசந்தி, கம்யூ., மோகன் ஆகியோர், கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.


இதுகுறித்து, குமார் கூறியதாவது: ஒன்றிய பொது நிதி, 1.50 கோடி ரூபாயில், 13 வார்டிலும் பணிகள் தேர்வு செய்து, நிதி ஒதுக்கப்படவுள்ளது. அதில், வார்டுக்கு தலா, 9, 14, 15, 19, 31 லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., கவுன்சிலர் வார்டுக்கு குறைந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், அனைத்து வார்டுக்கும் சரி சமமாக நிதியை பிரித்து ஒதுக்கக்கோரி, கூட்டத்திலிருந்து வெளியேறினோம். இவ்வாறு அவர் கூறினார். கமிஷனர் ராஜா கூறுகையில், ''நிதி சமமாக பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், 124 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X