பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., - ஏட்டுக்கு கொரோனா

Added : செப் 17, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருக்கு, கொரோனா ஏற்பட்டதை அடுத்து, அவரது மனைவி, மகன்களுக்கும், தொற்று உறுதியானதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம், சேலம் மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர், போலீசார், 140 பேர், போலீஸ் ஸ்டேஷன்களில், 180 பேர் என, 320 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு நேற்று தெரியவந்தது. அதில், மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில், 40 வயது ஏட்டு, இரும்பாலை மதுவிலக்கு பிரிவில் பணிபுரியும், 45 வயது ஏட்டு, 22 வயது எஸ்.எஸ்.ஐ.,யின் மகன், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும், 33 வயது எஸ்.ஐ., ஆகியோருக்கு தொற்று உறுதியானது. இதனால், போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X