பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.29.15 கோடி செலவில் ஏரி மேம்படுத்தும் பணி

Added : செப் 17, 2020
Share
Advertisement

சேலம்: பள்ளப்பட்டி ஏரியை, 29.15 கோடி ரூபாய் செலவில், மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. சேலம், பள்ளப்பட்டி ஏரியை மேம்படுத்தும் பணி குறித்து, நேற்று, மாநகராட்சி கமிஷனர் சதீஷ் ஆய்வு செய்த பின் கூறியதாவது: சீர்மிகு நகர திட்டத்தில், பள்ளப்பட்டி ஏரியை, 12.80 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தவும், 12.50 கோடி ரூபாய் மதிப்பில், அந்த ஏரிக்கு செல்லும் நீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, கால்வாயை திசை திருப்பும் பணியும், 3.85 கோடி ரூபாய் மதிப்பில், ஏரியை அழகுபடுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம், 29.15 கோடி ரூபாய் மதிப்பில், அரசு ஒப்புதல் பெற்று, பணிகள் தொடங்கியுள்ளன. இதில், ஏரிக்கரைகளை பலப்படுத்தல், ஏரிக்குள் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வாரும் பணி, ஏரியை சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்கும் பணி, படகு இல்லம் அமைத்தல், சூரிய மின்சக்தி உற்பத்தி தகடு பொருத்தம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். செயற்கை நீருற்று, விலங்குகளின் மாதிரி, விளையாட்டு பூங்கா, நடைமேடை, மிதிவண்டி ஓட்டும் தளம், உணவகம், கண்காணிப்பு கேமரா வசதி, நவீன மின்விளக்கு, கழிப்பறை வசதி உள்ளிட்டவையுடன் கூடிய பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X