பொது செய்தி

தமிழ்நாடு

பனமரத்துப்பட்டி ஏரிக்கும் மேட்டூர் உபரிநீர்; பாதுகாப்பு இயக்கம் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

சேலம்: பனமரத்துப்பட்டி ஏரிக்கும், மேட்டூர் உபரிநீரை கொண்டு வர வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பில், சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன், நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை அமைப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். அதில், பனமரத்துப்பட்டி ஏரியை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றவும், தூர்வாரி ஆழப்படுத்தி, சுற்றுலா தலமாக்க கோஷம் எழுப்பினர். இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர் பொன். சரவணன் கூறியதாவது: தலைவாசல், கால்நடை ஆராய்ச்சி பண்ணைக்கு, பனமரத்துப்பட்டி வழியாக, குழாய் மூலம் எடுத்துச்செல்லும் மேட்டூர் உபரிநீரை, குரால்நத்தத்தில் இருந்து, 1 கி.மீ., தொலைவில் உள்ள பனமரத்துப்பட்டி ஏரிக்கும் கொண்டு சென்று நிரப்ப வேண்டும். ஏரியின் நீர்வழித்தடங்களான, கூட்டாறு, வறட்டாறு, காப்புக்காடு, ராஜவாய்க்கால் போன்ற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X