சம்பவம் செய்தி

தமிழ்நாடு

158 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் மோசடி: ஒரே குடும்பத்தில் 3 பேர் மீது வழக்கு

Added : செப் 17, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில், 158 கிலோ வெள்ளி, இரண்டு லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, ஒரே குடும்பத்தில், மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.


சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் துளசிராமன், 52. இவரது மனைவி பிரேமலதா, 50, மகன் லட்சுமிகாந்த், 32. இவர்கள், 2.50 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டின் மீது பெற்ற கடனால், ஏலம் விடப்படுகிறது. அந்த வீட்டை ஏலத்தில் இருந்து காப்பாற்ற, சேலம், சங்கர் நகர், வெங்கடேசபுரத்தை சேர்ந்த ராம் மகன் பாபு, 36, என்பவரிடம் பணம் கேட்டனர். அவர், 158 கிலோ வெள்ளி கட்டி, இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அவற்றை பெற்றுக்கொண்ட, அந்த குடும்பத்தினர், இரு மாதத்தில் கூடுதலாக, 50 சதவீதம் சேர்த்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால், வெள்ளி, பணத்தை திருப்பித்தரவில்லை. இதுகுறித்து, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில், 2019 செப்டம்பரில், பாபு புகார் அளித்தார். விசாரணையில், பணம், வெள்ளியை தர கால அவகாசம் கோரினர். அந்த அவகாசம் முடிந்தும் தராததால், ஓராண்டுக்கு பின், நேற்று முன்தினம், துளசிராமன், பிரேமலதா, லட்சுமி காந்த் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X