சாயக்கழிவால் நிலத்தடி நீர் மாசு

Added : செப் 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சேலம்: சாயக்கழிவால் நிலத்தடி நீர் மாசு அடைந்துள்ளதாக, மக்கள் புகார் அளித்தனர். சேலம், சன்னியாசிகுண்டு, பாத்திமா நகர் மக்கள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: எங்கள் பகுதியில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். அங்குள்ள குருவிபனை ஏரியில், தனியார் சாய ஆலை கழிவு கலந்து, நிலத்தடி நீர், முழுமையாக மாசு அடைந்துவிட்டது. குடிநீர், பிற தேவைக்கு பயன்படுத்த முடியாத அளவில், ஒவ்வாத நீராகி விட்டது. இதுதொடர்பாக, மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. நீர், காற்று மாதிரி எடுத்து, பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
18-செப்-202009:38:17 IST Report Abuse
SENTHIL NATHAN கம்யூனிஸ்ட் தி மு க எல்லாம் காசு வாங்கி கொண்டு பேசாமல் இருக்கின்றனரா ??
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
18-செப்-202009:37:15 IST Report Abuse
SENTHIL NATHAN மக்களே அனைவரும் சேர்ந்து அங்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள். மில் இயங்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X