பொது செய்தி

தமிழ்நாடு

காய்ச்சல் பாதித்தோர் தாமாக வைத்தியம் பார்க்காதீர்கள்; கலெக்டர் அறிவுரை

Added : செப் 17, 2020
Share
Advertisement

தர்மபுரி: ''காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்கள், தாமாக வைத்தியம் செய்து கொள்ளாமல், சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையை நாட வேண்டும்,'' என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி கூறினார்.
தர்மபுரி, அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள, பிரத்தியேக பரிசோதனை மையத்தை துவக்கி வைத்து, பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தர்மபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தல் மையம், தற்போது, கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த போதும் எவ்வித அறிகுறியும் இல்லாமல் வருவோர், இந்த மையத்துக்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கு அலோபதி, சித்தா மருத்துவ முறைகளில் சிகிச்சையும், ஆவி பிடித்தல், யோகா பயிற்சி, சத்தான உணவு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் தினமும், 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. புற அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு, சி.டி., ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் மூலம், நுரையீரலில் பாதிப்பு உள்ளதா என அறிந்து, தேவைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப் படுகிறது. சளி, காய்ச்சல், தலைவலி அறிகுறிகள் தென்படும்போது, மருந்துக்கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் எனில், தாமாக வைத்தியம் செய்து கொள்ளாமல், அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மக்கள் சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X