பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் நடும் விழா

Added : செப் 17, 2020
Share
Advertisement

கம்பைநல்லூர்: கம்பைநல்லூர் அருகே, ஈசா வேளாண்மை காடுகள் வளர்ப்பு திட்டத்தில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டியில், ஈசா வேளாண்மை காடுகள் திட்டத்தில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதில், மரம் நடுவதன் நோக்கம், மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, செம்மரம், ஈட்டி, கருமருது, மஞ்சள் கடம்பை, தான்றி மரம் உள்ளிட்ட பலவகையை சேர்ந்த, 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.விழாவில், ஈசா யோகா மண்டல மேலாளர் சதீஷ், வனவர் வேடியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X