ஏரியில் கோடிக்கரையை உயர்த்த அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியில் கோடிக்கரையை உயர்த்த அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

Added : செப் 17, 2020
Share

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள, திண்டல் ஏரியின் கோடிக்கரையை உயர்த்த வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள திண்டல் ஏரிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, கே.ஆர்.பி., அணையின் உபரிநீர் திறப்பின்போது, இந்த ஏரிக்கு தண்ணீர் வரும். இதை பயன்படுத்தி, இப்பகுதி விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம். இந்நிலையில், தற்போது திண்டலில் உள்ள ஏரிக்கோடி புதியதாக கட்டும் பணி நடக்கிறது. மேலும், இதே பகுதியில் உள்ள உச்சம்பட்டி ஏரிக்கோடியின் அளவானது, மூன்று அடிக்கும் குறைவாகவே உள்ளது. தரை மட்டத்திலிருந்து குறைந்தபட்சம் மூன்று அடியாவது இருக்க வேண்டும். ஆனால், பூமியில் குழிதோண்டி ஐந்து அடிக்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறைந்த அடி உயரத்தில் ஏரி கோடிகள் இருப்பதால், குறைந்தளவே தண்ணீர் சேமிக்க முடியும். அணை உபரி நீர் மற்றும் மழை பெய்யும் காலத்தில், தண்ணீர் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். எனவே, ஏரி கோடியின் உயரத்தை, தற்போதுள்ள தரைமட்டத்தில் இருந்து, மூன்று அடிக்கு உயர்த்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், இந்த ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க முடியும் என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X