புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய ஆசிரியர் கூட்டணி மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய ஆசிரியர் கூட்டணி மனு

Added : செப் 17, 2020
Share

தர்மபுரி: புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக்கோரி, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும். ஹிந்தி, சமஸ்கிருதம் மொழிக்கு முக்கியத்துவம் அளித்துள்ள இக்கொள்கையால், அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வி, கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கக்கூடாது. ஆசிரியர்களுக்கும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை தகுதித்தேர்வும், மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு என்பது ஏற்புடையதாக இல்லை. அவற்றை களைய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X