பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி அரசு அங்காடியில் ரூ.54 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் ஏலம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், தினசரி நடக்கும் ஏலத்தில், தர்மபுரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து, ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில், செப்., மாதத்தின், 15 நாட்களில் நடந்த பட்டுக்கூடுகள் ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை. மேலும், 254 விவசாயிகள், 488 குவியல்களாக, 19 ஆயிரத்து, 434 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 110 முதல், 396 ரூபாய் வரை சராசரியாக, 277 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 53 லட்சத்து, 90 ஆயிரத்து, 341 ரூபாயாகும். செப்., மாதத்தின், 15 நாட்களில் நடந்த, இந்த பட்டுக்கூடுகள் ஏலத்தால் அரசுக்கு, 80 ஆயிரத்து, 856 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X