பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

Added : செப் 17, 2020
Share
Advertisement

தர்மபுரி: இந்திய அரசு மேம்பாட்டு தேசிய வளர்ச்சி நிறுவனம் அளிக்கும், குறுகிய கால தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும், 21 முதல், 28 வரை தர்மபுரியில் நடக்க உள்ளது. இப்பயிற்சி, தர்மபுரி, சாலைவிநாயகர் சாலையில், பி.டி.ஓ., அலுவலகம் அருகில், விஜய் வித்யா ஆஸ்ரம் பள்ளி எதிரில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தில் நடக்கிறது. பயிற்சி முடித்தவர்கள் தேசிய, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களில், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். சுயமாக நகைக்கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில், நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். பயிற்சியில், 18 வயது நிரம்பிய இருபாலரும் சேரலாம். கல்வி தகுதி, வயது வரம்பு அவசியமில்லை. பயிற்சி இறுதியில், இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்டணம், 4,500 ரூபாய் ஆகியவற்றுடன், வரும், 21ல் அன்று நேரில் வரவும். மேற்படி சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். இந்நிறுவனம், தேசிய, கூட்டுறவு வங்கிகள் மேலாளர்களுக்கு, ஐந்து மாநிலங்களில் பயிற்சி அளித்து வருகிறது. மேலும், இந்திய அரசு வருமான வரித்துறை நகை மதிப்பீட்டாளரால் பயிற்சி அளிக்கிறது. தமிழகம் முழுவதிலும், இந்த பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களே, பெரும்பான்மையாக தேசிய, கூட்டுறவு, தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர்களாக பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விபரங்கள் பெற, மொபைல் போன், 94437 28438 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X