மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

Added : செப் 17, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி காலனியில் பழுதான நிலையில் உள்ள, மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி காலனியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில், பஞ்., நிர்வாகம் சார்பில், 10 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது, இதில், சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. இந்நிலையில், பல ஆண்டுகளாக இதில் தண்ணீர் வராததால், இப்பகுதி மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி பெண்கள் திறந்த நிலையில் இயற்கை உபாதைகள் கழிக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து, அப்பகுதி மக்கள் பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், இப்பகுதியில் உள்ள பெண்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவல நிலை உள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் நலன்கருதி, பழுதான நிலையில் உள்ள இந்த, மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X