பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவியருக்கு உலர் உணவு பொருட்கள்

Added : செப் 17, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்தில், கொரோனா தொற்று காலத்துக்கு நிவாரணமாக, கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சத்துணவு சாப்பிடும் மாணவியருக்கு ஜூன், ஜூலை மற்றும் ஆக., மாதங்களில், பள்ளி வேலை நாட்களுக்கு மட்டும், அரிசி, பருப்பு, செப்., மாதத்துக்கான முட்டை உள்ளிட்ட உலர் உணவு பொருட்களை மாணவியரின் பெற்றோர்களிடம், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,737 மையங்களில் சத்துணவு சாப்பிடும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து, 167 மாணவ, மாணவியரின் பெற்றோர்களுக்கு, கொரோனா தொற்று காலத்துக்கு நிவாரணமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவு பொருட்கள் மற்றும் முட்டைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சத்துணவு சாப்பிடும், 386 மாணவியரின் பெற்றோர்களுக்கு, இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது,'' என்றார். ஆர்.டி.ஓ., கற்பகவள்ளி, சி.இ.ஓ., முருகன், தாசில்தார் வெங்கடேசன், தலைமை ஆசிரியர் மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X