பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் உயர்வு

Added : செப் 17, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் கடந்த, 15 நாளில், 12 அடி உயர்ந்து, நேற்று, 40 அடியாக இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 15 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் முழுவதும், தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்டதால், கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அணை நீர்மட்டம் கடந்த, 1ல், 28 அடியாக இருந்த நிலையில், 15 நாட்களில், 12 அடி உயர்ந்து நேற்று, 40.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 92 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கே.ஆர்.பி., அணைக்கு வினாடிக்கு, 666 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 427 கன அடியாக சரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X