பொது செய்தி

தமிழ்நாடு

3,667 பேரின் கிசான் முறைகேடு தொகை ரூ.1.43 கோடி அரசு கணக்கில் சேர்ப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் தகுதியற்ற நபர்களிடமிருந்து, 1.43 கோடி ரூபாய், அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தில் பதிவு செய்த, தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலமாக, பணம் மீட்கப்பட்டு, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கண்டறியப்பட்ட, 8,408 தகுதியற்ற பயனாளிகளில், கடந்த, 15 வரை, 3,667 பேரிடமிருந்து, ஒரு கோடியே, 43 லட்சத்து, 67 ஆயிரம் ரூபாய் அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 4,741 பயனாளிகளிடம் இருந்து உரிய பணத்தை, வருவாய், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் வசூலித்து, அரசு கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், தகுதியற்ற பயனாளிகள் மற்றும் அவர்களை தவறுதலாக சேர்த்த, கணினி மைய உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் கண்டுபிடித்து, அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X