சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவரை கொன்று பணம் கொள்ளை: 5 பேர் கும்பலுக்கு போலீசார் வலை

Added : செப் 17, 2020
Share
Advertisement

தண்டராம்பட்டு: முதியவர் தலையில், கல்லை போட்டு கொலை செய்து, மூதாட்டியின் காதை அறுத்து நகை, மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற ஐந்து பேர் கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த குங்கிலிநத்தத்தை சேர்ந்தவர் ராஜி, 80; இவரது மனைவி அலமேலு, 77; இருவரும் அங்குள்ள ஏரி பகுதியில் குடிசை அமைத்து, ஆடுகளை வளர்த்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், ஐந்து பேர் கும்பல், அவர்களது குடிசைக்கு சென்றபோது, அவர்களை யார் என, இருவரும் விசாரித்துள்ளனர். அந்த கும்பல், அலமேலுவிடம் கம்மல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றை கழற்றி தரும்படி கேட்டது. தர மறுத்த அலமேலுவின் காதை அறுத்து, கம்மலை பறித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த ராஜி கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த கும்பல் அங்கிருந்த பாறாங்கல்லை எடுத்து, அவரது தலை மீது போட்டு கொலை செய்தது. பின், குடிசையில் ஆடு விற்று வைத்திருந்த, 20 ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்து சென்றது. இது குறித்து, வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X