பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமரின் கிசான் திட்ட முறைகேட்டில் கணினி ஆப்பரேட்டர் கைது; 8 பேர் 'சஸ்பெண்ட்'

Added : செப் 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ராணிப்பேட்டை: பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட, சோளிங்கர் வேளாண் அலுவலக கணினி ஆப்பரேட்டர் சுப்பிரமணியை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். மேலும், எட்டு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.


பிரதமர் கிசான் சம்மான் திட்ட மோசடி குறித்து, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில், வேலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் துறையில், தொகுப்பூதியத்தில் பணியாற்றிய, 10 கணினி ஆப்பரேட்டர்களை விசாரித்தனர். இதில், சோளிங்கர் வேளாண் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றிய, கலவையை அடுத்த கணியூரை சேர்ந்த, கணினி ஆப்பரேட்டர் சுப்பிரமணி, 25, 'யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை' முறைகேடாக பயன்படுத்தி, 500க்கும் மேற்பட்ட போலி பயனாளிகளுக்கு, நிதியுதவி வழங்கியது தெரிந்தது. இதையடுத்து, அவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர். வேலூர் மாவட்டம், வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், பேர்ணாம்பட்டு, பள்ளிகொண்டா ஆகிய வேளாண் அலுவலகங்களில் பணியாற்றிய, எட்டு கணினி ஆப்பரேட்டர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வேளாண் துறை அதிகாரிகள் அவர்களை நேற்று, 'சஸ்பெண்ட்' செய்தனர்.


* பிரதமரின் கிசான் திட்டத்தில், வேலூர் மாவட்டத்தில், 3,700 பேர் முறைகேடாக, 1.20 கோடி ரூபாய் பெற்றதில், இதுவரை, 81 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், 2,900 பேர் முறைகேடாக பெற்ற, 1.12 கோடி ரூபாயில், இதுவரை, 45 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில், 5,600 பேர் முறைகேடாக பெற்ற, நான்கு கோடி ரூபாயில், இதுவரை, 47 லட்சம் ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸ்டீவ் ராஜ், பங்களூர் கணணி ஆபரேட்டர் சஸ்பென்ஷன் என்பது குற்றவாளிகளை காப்பாற்றும் கலைஞர் கருணாநிதி அவர்கள் பின்பற்றிய தந்திரம் என்கின்றனர் அதிகாரிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X